மூலப்பட்டி காலனி அருகே துக்க காரியத்திற்காக சென்ற முதியவர் சடலமாக மீட்பு.
Karur King 24x7 |2 Jan 2026 9:04 PM ISTமூலப்பட்டி காலனி அருகே துக்க காரியத்திற்காக சென்ற முதியவர் சடலமாக மீட்பு.
மூலப்பட்டி காலனி அருகே துக்க காரியத்திற்காக சென்ற முதியவர் சடலமாக மீட்பு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா நால் ரோடு நாடார் தெருவை சேர்ந்தவர் மணி வயது 63. இவர் திருச்சி மாவட்டத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜனவரி 1ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள குப்பமேட்டுப்பட்டி பகுதியில் நடைபெற்ற துக்க காரிய நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி சென்றார் மணி. அதன் பிறகு மதியம் 2 மணி அளவில் மூலப்பட்டி காலனி பகுதியில் உள்ள நித்தியானந்தம் என்பவரது தோட்டத்தில் மணி உயிரிழந்த நிலையில் இருந்ததை அவரது உறவினர் ரகுபதி என்பவர் உயிரிழந்த மணியின் மருமகளுக்கு அலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணியின் மகன் சுரேஷ் வயது 40 என்பவர் அளித்த புகாரில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story


