கரூரில்,பாரம்பரிய நடனத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டம். முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு.
Karur King 24x7 |3 Jan 2026 7:01 PM ISTகரூரில்,பாரம்பரிய நடனத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டம்.முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு.
கரூரில்,பாரம்பரிய நடனத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் கொண்டாட்டம்.முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு. இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மனின் 267 வது பிறந்தநாள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக கரூரை அடுத்த தோரணக்கல்பட்டி பகுதியில் முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நாயக்கர் சமுதாயத்தினரின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட ஆள் உயர வெண்கல சிலைக்கு இன்று எம் ஆர் விஜயபாஸ்கர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நாயக்கர் சமுதாயத்தினர் தங்களது விருப்பத்தை நிறைவேற்றி தந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். மேலும், தேவராட்டம் ஆடி தங்களது சமுதாயத்தின் கடவுளாக போற்றப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கலையரசன் உள்ளிட்ட அதிமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.
Next Story






