வெங்கமேடு அருகே புத்தாண்டை கொண்டாட வந்த வாலிபரிடம் மதுபோதையில் தகராறு செய்த இருவர் கைது.

X
Karur King 24x7 |3 Jan 2026 7:21 PM ISTவெங்கமேடு அருகே புத்தாண்டை கொண்டாட வந்த வாலிபரிடம் மதுபோதையில் தகராறு செய்த இருவர் கைது.
வெங்கமேடு அருகே புத்தாண்டை கொண்டாட வந்த வாலிபரிடம் மதுபோதையில் தகராறு செய்த இருவர் கைது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் செஞ்சுடையான் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார் வயது 35. இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக கரூருக்கு சர்ச்சுக்கு வந்துள்ளார். பின்னர் வீடு திரும்புவதற்காக கரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அதிகாலையில் நின்று கொண்டிருந்த போது, அவருடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனை கவனித்த கரூர் சின்னாண்டாங் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 26, வெங்கமேடு கொங்கு நகர் அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் வயது 25 ஆகிய இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். ஜிதேந்தர் அப்போது ஊர் செல்வதற்காக பரமத்தி வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார்.இதே பேருந்து பின் தொடர்ந்து சென்ற மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகியோர் வெங்கமேடு புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே பேருந்து வந்த போது இருவரும் ஜிதேந்தர் குமார் மற்றும் அவருடன் வந்த பெண்ணையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி இருவரிடம் தகாத வார்த்தை பேசி பிரச்சனை செய்து கல்லால் அடித்துள்ளனர். இதில் ஜிதேந்தர் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வெங்கமேடு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
