கரூரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரூரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கரூரில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் பத்து ரூபாய் இயக்கத்தின் சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விசுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர்கள் வழக்கறிஞர் சதீஷ்குமார், பாஸ்கரன், மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன்,கரூர் மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட ஆலோசகர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வு பெறுவதற்கான பயிற்சியில் பங்கேற்க வந்தனர். ஒவ்வொரு தனி மனிதனும் சட்டத்தைப் பற்றிய குறைந்த அளவாவது தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அப்போதுதான் சட்டத்தின் வழியில் நடக்கும் ஆட்சியில் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தால் அதனை எதிர்கொள்வதற்கு இந்த பயிற்சி உதவும் என்ற நோக்கில் பயிற்சி நடைபெற்றது.
Next Story