கரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வு ஊதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்ட சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7850, அகவிலை படியுடன் குடும்ப ஓய்வூதியம், ஈமச்சடங்கு நிதி மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story