மத்திய அமைச்சகத்தின் தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள் கரூர் சம்பவ இடத்திற்கு உயர் தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை- எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் விசாரணை.

மத்திய அமைச்சகத்தின் தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள் கரூர் சம்பவ இடத்திற்கு உயர் தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை- எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் விசாரணை.
மத்திய அமைச்சகத்தின் தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள் கரூர் சம்பவ இடத்திற்கு உயர் தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை- எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் விசாரணை. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வேலுச்சாமிபுரம் பகுதி பொதுமக்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் என பல்வேறு நபர்களிடம் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் வரும் 12ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லி சிபி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் தற்போது சிபிஐ விசாரணை தீவிர வேகமெடுத்துள்ளது. இன்று சி பி ஐ விசாரணையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகளும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் உயர்ரக தொழில்நுட்ப கேமிராவுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story