கரூர் "உங்க கனவை சொல்லுங்க"கணக்கெடுப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் "உங்க கனவை சொல்லுங்க"கணக்கெடுப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
"உங்க கனவை சொல்லுங்க"கணக்கெடுப்பு பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கனவை தெரிந்து கொள்ளும் விதமாக உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை இன்று சென்னையில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்கான கணக்கெடுக்கும் பணிகளை துவக்குவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட தன்னார்வளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி பணிகளை மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட சத்துணவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பொது மக்களை சந்தித்து பொதுமக்களின் கனவை கேட்டறிந்து அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ள கைபேசி செயலியில் அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய உள்ளார்கள். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தங்களது கனவு திட்டத்தை அடைவதற்காக அடையாள எண் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story