கரூரில் மிதிவண்டிகளை வழங்கிய செந்தில் பாலாஜிக்கு மணி ஓசை எழுப்பி நன்றி தெரிவித்த மாணவிகள்.

கரூரில் மிதிவண்டிகளை வழங்கிய செந்தில் பாலாஜிக்கு மணி ஓசை எழுப்பி நன்றி தெரிவித்த மாணவிகள்.
கரூரில் மிதிவண்டிகளை வழங்கிய செந்தில் பாலாஜிக்கு மணி ஓசை எழுப்பி நன்றி தெரிவித்த மாணவிகள். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு தேர்வு காலம் நெருங்கி வருவதால் அவர்களுக்கு தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்கான வினா விடை புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் மிதி வண்டிகளை பெற்றுக் கொண்ட பிறகு மிதிவண்டிகளில் உள்ள மணி ஓசையை ஒரு சேர எழுப்பி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story