தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கரூரில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
Karur King 24x7 |12 Jan 2026 6:56 PM ISTதேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கரூரில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே கரூரில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் தேர்தல் ஆணையத்தால் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது தொகுதிக்குட்பட்ட பாலமாபுரம் பகுதியில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று அதி அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். கரூரில் கடந்த மாதம் 80 அடி சாலையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் கரூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் என குறிப்பிட்டு இருந்த நிலையில்,தேசிய ஜனநாயக கூட்டணியில் கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுகவுக்கு வழங்கப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பாலமாபுரம் பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அப்போது பொதுமக்கள் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story







