கரூரில் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்த

கரூரில் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கரூரில் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சீறி பாய்ந்த காளைகள் - வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில் மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியினை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கரூர், திருச்சி, கோவை, சிவகங்கை, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. இரட்டை மாடு , பெரிய ஒற்றை மாடு, சிறிய ஒற்றை மாடு என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இரட்டை மாட்டிற்கு 10 மைல் தூரமும், பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றக் காளைகள் சாலையில் வெற்றி பெறும் முனைப்போடு சீறி பாய்ந்த நிகழ்வு பார்வையாளர்களை பரவசப்படுத்தியது . போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ரொக்க பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், சிறந்த காளைக்கான பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story