வாக்காளர்கள் செம்மறியாடுகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் ஓநாய்களாக தான் இருப்பார்கள் -கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.

வாக்காளர்கள் செம்மறியாடுகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் ஓநாய்களாக தான் இருப்பார்கள் -கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.
வாக்காளர்கள் செம்மறியாடுகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் ஓநாய்களாக தான் இருப்பார்கள் -கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி. கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இன்று கரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாளை ஜனவரி 21 ஆம் தேதி 17 வது கள் விடுதலை மாநாடு ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக கள்ளுக்கு விதித்த தடையை நீக்க கோரி போராடி வருவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்வதற்கு முன்பாக கள்ளுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் எனவும், இந்த மாநாட்டின் நோக்கம் வாக்காளர்களை பயிற்றுவிப்பதன் மூலம் தமிழகமே திரும்பிப் பார்க்க வைப்பது தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணை கீழ்பவானி அணை. இது ஈரோடு திருப்பூர் கரூர் மாவட்டங்களில் பாசன வசதி பெறுகிறது. இந்த அணையின் நீர் நிர்வாகம் 1958 முதல் தொடர்ந்து அரசு விதிமுறைகளுக்கும் காவிரி தீர்ப்புக்கும் எதிராக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். மேலும்,வாக்காளர்கள் செம்மறியாடுகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் ஓநாய்களாக தான் இருப்பார்கள் அதற்கு இந்த கள் தடையே சான்று என்று தெரிவித்தார்.
Next Story