மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்க திட்டங்களை வகுத்து செயலாற்று துடித்தது. இதற்கு தமிழகத்தில் அப்போது எதிர்ப்பு குரல் வலுத்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதன் உச்சமாக தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக மத்திய அரசின் முடிவிற்கு எதிராக தீக்குளித்து தங்கள் இன் உயிரை நீத்து தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்தன. தமிழ் மொழியை காப்பதற்காக தங்கள் இன் உயிரை நீத்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் அரசியல் கட்சிகள் ஜனவரி 25ஆம் தேதி அன்று வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று கரூரில் திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தின் முன்பு உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திரு உருவப் படங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மொழிப்போரில் உயர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
Next Story