கரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர், எஸ் பி துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டியும் பயணிகளுக்கு வழங்கியும் விழிப்புணர்வு.
Karur King 24x7 |30 Jan 2026 1:41 PM ISTகரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர், எஸ் பி துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டியும் பயணிகளுக்கு வழங்கியும் விழிப்புணர்வு.
கரூரில் போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர், எஸ் பி துண்டு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டியும் பயணிகளுக்கு வழங்கியும் விழிப்புணர்வு. தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை கலாச்சாரமும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும் போதைப் பொருட்களை பதுக்குவோர் மற்றும் விற்பனை செய்வோரை தடுக்கும் விதமாக பொதுமக்கள் இது போன்ற நபர்கள் குறித்த தகவல்களை 10581, 94984 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி whatsapp எண்ணிற்கு வழங்குமாறு பதிவிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகிய இருவரும் இன்று கரூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிக்கும் பயணிகளிடமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவ்வாறு தகவல் அளிக்கும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் தகவல்கள் வெளிப்படுத்தாது எனவும், அது தொடர்பாக ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறையினர் அறிவிப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறையினரும், அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடையே போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story






