கரூரில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |30 Jan 2026 4:04 PM ISTகரூரில் பல கோடி ரூபாய் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கரூரில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா மேலப்பாளையம்-கோயம்பள்ளி இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் மதிப்பில் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியினுடைய முனைப்பால் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் பாலப்பணிகள் முடிவடைந்தும் பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அமராவதி ஆற்றின் இரு கரை பகுதிகளில் வசிக்கக்கூடிய விவசாயிகள், பொதுமக்கள், மாணாக்கர்கள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் முறையிட்டும் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை. அண்மைக்காலமாக இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விரைவில் இணைப்பு சாலை அமைக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று மேலப்பாளையம் பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க நிலம் கையாக படுத்த வேண்டி இருப்பதால் அது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் திருச்சி மாவட்ட நில எடுப்பு உதவி ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிலமெடுப்பு துறை டிஆர்ஓ ரம்யா தேவி, ஈரோடு நபார்டு கோட்ட பொறியாளர் முருகேசன், கரூர் ஏ டி ஏ திருமால் செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட கிராம பெரியவர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். எங்க கூட்டத்தில் இணைப்பு சாலை அமைப்பதற்கு ஏற்கனவே வரைவு செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அதிகாரிகள் கேட்டனர். பல வருடங்களாக இந்த திட்டம் செயல்படுத்தாமல் இருந்தமைக்கு பொதுமக்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்த போதும் விரைவில் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Next Story








