கரூர்.காளியப்பனூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கரூர்.காளியப்பனூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரூர்.காளியப்பனூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு செய்யப்படவில்லை. ஆயினும் தேர்தலில் போட்டியிடக் கூடிய அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை தேர்தலுக்கு தயார் படுத்தும் விதமாக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் தாந்தோணி மலை அருகே உள்ள காளியப்பனூரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினுடைய கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத்தின் அன்பு இல்லத்தில் அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மருத்துவர் மு மணி, மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், மாநில உழவர் பேரியக்க செயலாளர் பொன். ரமேஷ், மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட மாநில மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நடைபெற உள்ள தேர்தலில் தங்களது பங்களிப்பு குறித்து கருத்து தெரிவித்தனர்.
Next Story