கரூரில் ராகுல் காந்தி,ஜோதிமணி உருவ பொம்மைகளை எரிக்க முயற்சித்த பிஜேபினர் கைது.

கரூரில் ராகுல் காந்தி,ஜோதிமணி உருவ பொம்மைகளை எரிக்க முயற்சித்த பிஜேபினர் கைது.
கரூரில் ராகுல் காந்தி,ஜோதிமணி உருவ பொம்மைகளை எரிக்க முயற்சித்த பிஜேபினர் கைது. பிரதமர் நரேந்திர மோடியை பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் தாக்க திட்டம் தீட்டியதாகவும், பாராளுமன்ற மாண்பை சிதைத்து அராஜக அரசியல் செய்து வருவதாக கூறி ராகுல் காந்தி மற்றும் எம்பி ஜோதி மணியை கண்டித்து கரூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தடையை மீறி பிஜேபினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி, எம்பி ஜோதி மணியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல் காந்தி மற்றும் கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் உருவ பொம்மைகளை எரிக்க முயன்றதால் போலீசார் மற்றும் பாஜகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து பிஜேபி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மக்களின் பேராதரவை பெற்று ஆட்சி நடத்துவது பொறுக்க முடியாமல் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வரும் ராகுல் காந்தி, மற்றும் கரூருக்கு ஏதும் செய்தாத கரூர் எம்பி ஜோதிமணி ஆகியோர் பாராளுமன்றத்தில் தகாத செயலில் ஈடுபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தோம். தொடர்ந்து இருவரது உருவ பொம்மைகளையும் எரிப்போம் என தெரிவித்தார்.
Next Story