கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கம் சார்பில் உடல் தகுதி
Karur King 24x7 |8 Feb 2026 2:58 PM ISTகரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கத்தின் சார்பில் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் பெற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கத்தின் சார்பில் உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் பெற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர். கரூர் இளந்தளிர் ரோட்டராக்ட் சங்கம் சார்பில் இன்று இரண்டாவது ஆண்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் 10 கிலோமீட்டர் மற்றும் 5 கிலோமீட்டர் தூரம் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டன. கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி, நகரின் முக்கிய பகுதிகளான திண்ணப்பா கார்னர், திருக்காம்புலியூர், பசுபதிபாளையம், சுங்க கேட் பகுதிகள் வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உடல்தகுதி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Next Story






