கரூர் அருகே தொட்டிவாடி பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் பங்கேற்பு.
Karur King 24x7 |8 Feb 2026 3:48 PM ISTகரூர் அருகே தொட்டிவாடி பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் பங்கேற்பு.
கரூர் அருகே தொட்டிவாடி பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் பங்கேற்பு. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பி.அணைப்பாளையம் கிராமத்தில் உள்ள தொட்டிவாடி பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முனியப்ப சாமி ஆகிய பரிவார தெய்வங்கள் ஆசி வழங்கி வரும் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக யாக வேள்வியில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பிறகு கும்பாபிஷேக விழாவிற்கு தன்னால் இயன்ற நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கி கோவில் விழா கமிட்டி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். கொங்கு இளம்புயல் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விழா கமிட்டியின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story







