கரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் -முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
Karur King 24x7 |9 Feb 2026 3:57 PM ISTகரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் -முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
கரூரில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் -முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவை பரிமாறி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் சுதா மற்றும் அரசு அதிகாரிகள், முழுமை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story




