கரூரில், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
Karur King 24x7 |10 Feb 2026 3:10 PM ISTகரூரில், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூரில், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், மாவட்ட அளவிலான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்வேந்தன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு உரிய அங்கீகாரம் கட்சியில் அளிக்கப்பட்டு வருவதாகவும், நாள்தோறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதாகவும், கிராமங்களில் இளைஞர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்றார்.
Next Story





