மயிலாடுதுறைமாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு
Mayiladuthurai King 24x7 |20 Dec 2024 12:35 PM GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து புவிகாப்பு அறக்கட்டளையினர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் புவிகாப்பு அறக்கட்டளை சார்பில் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. நிர்வாக அறங்காவலர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதால் மாவட்டத்தை பாதுகாப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது, மக்களிடம் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வரும் 2025ம் ஆண்டில் மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவது, மாவட்டத்தில் 70 கி.மீ. தூரம் உள்ள கடற்கரை ஓரங்களில் பனைவிதைகள் நடவு செய்து பராமரிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் எராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story