மணல்மேட்டில் 10செ.மீ. பலத்த மழை-, வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், கோனேரிராஜபுரம் கிராமத்தில் மூதாட்டியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று மாலை 5 மணிக்கு மேல் தொடங்கி இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. பல மணி நேரம் நீடித்த மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் 31 மிமீ, மணல்மேட்டில் 96 மிமீ, சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் 43 மிமீ, கொள்ளிடத்தில் 77 மிமீ, செம்பனார்கோவிலில் 42 மில்லி மீட்டர் மழை பதிவாகி மாவட்டத்தில் சராசரியாக 55.63 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் கிராமம் அக்கரைத்தெருவில் வசிக்கும் சுந்தராம்பாள் என்ற மூதாட்டியின் ஓட்டு வீட்டின் சுவர் மழையால் நேற்று இரவு இடிந்து விழுந்து சேதமடைந்தது. சுவர் வீட்டில் வெளிப்பக்கம் விழுந்ததால் சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
Next Story