கல் குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் 8 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள்.,

பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கல்குவாரியில் இருந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக பாரம் ஏற்றி சென்ற10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை.,
பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கல்குவாரியில் இருந்து அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக பாரம் ஏற்றி சென்ற10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை., பொள்ளாச்சி. ஆகஸ்ட்.29. பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, கேரளாவுக்கு கனிம வளம் கற்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது., இதில், சில லாரிகளில் சட்ட விரோதமாக அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக, கனிம வளம் கற்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்., இதில், கோபாலபுரம் மற்றும் வளந்தாயமரம் சோதனை சாவடிகள் வழியாகயும் மற்றும் மாற்றுப் பாதைகள் வழியாகவும் கேரளாவுக்கு அதிக அளவு கற்கள் கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது., இந்த தகவலின் அடிப்படையில் இணை போக்குவரத்து ஆணையர் சிவக்குமரன் உத்தரவின் அடிப்படையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிறப்பு வாகன தணிக்கை செய்த போது, கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லும் லாரியை சோதனை செய்யப்பட்டது., அதில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக 20 டன் கற்கள் ஏற்றுச் செல்லப்பட்ட 10 லாரிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது., பறிமுதல் செய்யப்பட்ட 10 லாரிகளுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்., மேலும் தொடர்ந்து சோதனைச் சாவடிகளில் மற்றும் வேறு வழியில் வாகனங்கள்  செல்கின்றதா என்பதை காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்., ம.சக்திவேல்.பொள்ளாச்சி.9976761649.,
Next Story