போலி பத்திரம் மூலம் ரூ.100 கோடி மதிப்பிலான சமுதாய இடம் விற்பனை

மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் இடம் அருகில் ரூ.100 கோடி மதிப்புடைய 2 ஏக்கர் கிராம சமுதாய நிலத்தை தனி நபர் கபளீகரம்
. மயிலாடுதுறை அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தை ஒட்டி ரூ.100 கோடி மதிப்பிலான சுமார் 2 ஏக்கர் இடம் கிராம சமுதாய கணக்கில் உள்ளது.  இந்த இடத்தை மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் விற்பனை ஆவணமாக பதிவுசெய்து அதன்மூலம் வருவாய் ஆவணங்களை மாற்றி, இணை சார் பதிவாளர், மண்டல துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூவரும் சேர்ந்து காவல் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்டோரின் கையெழுத்தை மோசடியாக இட்டு போலி ஆவணங்களை தயாரித்து, அதனை ஆவணப்பதிவு செய்ததுடன்,  அதற்கு பட்டாவும் பெற்றுள்ளதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கதிரவன் என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.  போலி ஆவணங்களை ஆய்வு செய்து, மோசடியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை கையகப்படுத்தி கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பூங்கா, சமுதாய நலக்கூடம் அல்லது விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story