ஒன்றிய பாஜக அரசிடம்100 நாள் வேலைக்கு கூலி கேட்டு போராட்டம்

மயிலாடுதுறையில் 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதிய பாக்கியை வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் :-
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதிய பாக்கியை வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்ட தலைவர் நீதிசோழன் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணபதி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதிய பாக்கியை வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டும், வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான படி வழங்க வேண்டும், ஆண்டிற்கு 200 நாள் வேலை, நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்,  மத்திய அரசே 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைக்காதே போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிக்குமீ விரிவு படுத்த வலியுறுத்தியும்  பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் திருவோடு ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story