மயிலாடுதுறையில் கலைஞர் 102 பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வர் கல மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்; அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு:- காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏ பங்கேற்பு
. மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா திமுகவினரால் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் இமயநாதன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பூம்புகார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில்  மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் கலைஞர் உருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  . இதேபோல் மங்கைநல்லூர் கடைவீதியிலும்,மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு திமுக நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொதுமக்களுக்கு உணவு மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கினார்.இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி சுதா, காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
Next Story