வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Karur King 24x7 |12 Dec 2025 4:36 PM ISTவன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியர்களுக்கு 10.5 / இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தவும்,அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சி கொடியை கையில் ஏந்தி பிடித்து தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த பி எம் கே பாஸ்கரன், இந்தியாவில் ஆறு ஏழு மாநிலங்களில் ஏற்கனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழக அரசு தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் முன்னதாக கரூர் மாநகராட்சி அலுவலகம் பகுதியில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க வந்தனர்.
Next Story





