ஆதிமயூரநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மயில் உருவில் ஸ்ரீஅபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் புத்தாண்டு தினத்தில் மயில் அம்மன் சமேத ஸ்ரீஆதி மாயூரநாதர் ஸ்வாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இறைதொண்டு புரியும் குதம்பை சித்தர் உழவாரப் பணி மன்றம் 25 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 108 சங்குகள் புனித கடங்கள் வைக்கப்பட்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனம், மா பொடி, மஞ்சள் பொடி, நெல்லி பருப்பு பொடி, திருமஞ்சன திரவியம், ரசபஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அன்னாபிஷேகம், நார்த்தம் பழச்சாறு உள்ளிட்ட 37 வகையான அபிஷேக பொருட்களால் ஸ்ரீ ஆதி மாயூரநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அபிஷேகத’;திற்கும் தீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பூரணாகுதி நடைபெற்று ஹோம பூஜையில் பூஜிக்கப்பட்ட 108 சங்காபிஷேகம் மற்றும் மகா சங்காபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை சோடச தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அபிஷேக ஆராதனைகளை கண்டும் ஶ்ரீமாயூரநாதர், ஶ்ரீ அபயாம்பிகை சன்னதிகளில் 2025 புத்தாண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டி தரிசனம் செய்தனர்.
Next Story






