மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் 11 கேவி பிரேக்கர் எரிந்து நாசம்

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு.
மயிலாடுதுறையில்  உள்ள பேச்சாவடி என்னும் இடத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கக்கூடிய துணைமின்நிலையம் உள்ளது.  இங்கு காலை 11.30 மணி அளவில்11 kv பவர்  பிரேக்கர் பழுதாகி பலத்த சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றுதீயை அனைத்தனர்   இந்த துணை மின் நிலையம் மூலமாக மின்சாரம் பெறக்கூடிய மங்கைநல்லூர், எலந்தங்குடி, சேந்தங்குடி, திருவிழந்தூர், மூவலூர், மேமாத்தூர் போன்ற இடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக நாகப்பட்டினத்தில் உள்ள மின்வாரிய தலைமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழுதடைந்த பவர் பிரேக்கர் சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தத்தில் இங்கு பேச்சாவடியில் ஆறு 11kv   பிரேக்கர்உள்ள நிலையில் ஒன்று முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்துள்ளதால் மின்சாரம் நகர் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Next Story