செப். 11 ரயில் மறியல் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம்
Mayiladuthurai King 24x7 |1 Sep 2024 3:05 PM GMT
மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.11-ஆம் தேதி நடத்தப்படவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
:- மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.11-ஆம் தேதி நடத்தப்படவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில்வே வழித்தடம் மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ குத்தாலம் பி.கல்யாணம் தலைமை வகித்தார். இதில், முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இக்கூட்டத்தில், 1926-ஆம் ஆண்டுமுதல் 1987-ஆம் ஆண்டுவரை இயங்கிய மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை மீண்டும் தொடங்கி அதனை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், விழுப்புரம்-தஞ்சாவூர் இரட்டை ரயில்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், மயிலாடுதுறையில் ரயில் பெட்டிகள் முதன்மை பராமரிப்பு மையத்தை (பிட்லைன்) மீண்டும் அமைக்க வேண்டும், பாரத பிரதமரால் பிப்.26-ஆம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டு, இதுவரை துவங்கப்படாமல் உள்ள நீடூர் மற்றும் மாப்படுகை ரயில்வே மேம்பாலம் பணியை துவக்கி விரைந்து முடிக்க வேண்டும், மேற்கூறிய தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி செப்.11-ஆம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story