கரூர்-ரூ.1,20,60,000/- பரிசு வென்று கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் இதுவரை சாதனை!
Karur King 24x7 |10 Dec 2025 4:42 PM ISTகரூர்-ரூ.1,20,60,000/- பரிசு வென்று கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் இதுவரை சாதனை!
கரூர்-ரூ.1,20,60,000/- பரிசு வென்று கரூர் பரணி பார்க் வித்யாலயா மாணவர்கள் 335 பேர் இதுவரை சாதனை! தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு-2025ன் கரூர் பரணி பார்க் வித்யாலயா 100 சாதனையாளர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்சியளித்து கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டு விழா இன்று பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் மொழியில் தலைசிறந்த ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.36,000/- வீதம் பரிசுத்தொகை வழங்குவதற்காக நமது தமிழ்நாடு அரசால் மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு-2022ல் 46 பேர், 2023ல் 103 பேர், 2024ல் 86 பேர், 2025ல் 100 பேர் வெற்றி பெற்று மொத்தம் 335 மாணவர்கள் இதுவரை சாதனைப் படைத்துள்ளனர். இவ்விழாவிற்கு தாளாளர் சா.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் - தனியார் பள்ளிகள், திருமதி. ப.க.செல்வமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வில் சாதனைப் படைத்த அனைத்து வெற்றியாளருக்கும், சாதனைக்கு உறுதுணையாக இருந்த முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன், பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, ஆசிரியப் பெருமக்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர் சாதனைகளின் மூலம் தமிழ்நாட்டின் தமிழ் இலக்கிய தலைநகர் என்று கரூர் பெரும் புகழ் பெற்றுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் புகழாரம் சூட்டினார். கரூர் பரணி ஆசிரியர்களின் மிகச்சிறப்பான தன்னலமற்ற தம் கடும் உழைப்பால், தமிழ் பயிற்சியால் சாதனை படைத்த 100 வெற்றியாளர்களும் நமது தமிழக அரசிடம் இருந்து மொத்தமாக ஊக்கத்தொகை ரூ.1,20,60,000/- பெற்று இமாலய சாதனை புரியும் வகையில் சிறப்பாகப் பயிற்றுவித்த முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரியர்களையும் உலகெங்கும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
Next Story



