சீர்காழி அருகே 125 பவுன் ரூ.80ஆயிரம் நகை கொள்ளை

சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 125 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணம் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. திருவெண்காடு போலீசார் விசாரனை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசிப்பவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.மூன்று நாட்களுக்கு பின் நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் அறைகளிலிருந்த பீரோ மற்றும் சூட்கேஸ் உடைத்து அதில் இருந்த 125 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 80 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து செல்வேந்திரன் திருவெண்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம் சீர்காழி அருகே மேலச்சாலை இந்தியன் வங்கி ஏடிஎம் இயந்திரம் உடைத்து ஆறு லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது அந்த ஊரை அடுத்துள்ள மங்கை மடத்தில் 125 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story