பொன்னேரியில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம் 15, ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து மறியல்

X
Ponneri King 24x7 |8 Dec 2025 2:18 PM ISTமறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்
பொன்னேரியில் கிராம ஊராட்சி பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம் 15, ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழக அரசு கொரோனா காலத்தில் பணி செய்ததற்காக அறிவித்த ஊக்கத்தொகை 15000 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பாக சிஐடியு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர் உள்ளாட்சி சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் கயிறுகள் மூலம் தடுத்து நிறுத்தி அவர்களிடம் சமரசம் மேற்கொண்டனர் அதனை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்
Next Story
