கரூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார் செந்தில் பாலாஜி.
Karur King 24x7 |1 Feb 2026 12:59 PM ISTகரூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார் செந்தில் பாலாஜி.
கரூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார் செந்தில் பாலாஜி. தைப்பூச திருவிழாவை இன்று உலகெங்கும் உள்ள முருகன் ஆலயம் மற்றும் சிவன் ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் தேரோட்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் அருகே உள்ள வெண்ணமலை பாலசுப்பிரமணி சுவாமி திருக்கோவிலில் இன்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். மேலும் கோவில் மாட வீதிகளில் இன்று மாலை தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான செந்தில் பாலாஜி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் சுமார் 15,000 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கு கோவில் அருகே ஏற்பாடு செய்து இன்று காலை அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அளவிலான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story





