கரூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்ட முகாம்களில் இதுவரை 19,354 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்.
Karur King 24x7 |15 Nov 2025 5:21 PM ISTகரூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்ட முகாம்களில் இதுவரை 19,354 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல்.
கரூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்ட முகாம்களில் இதுவரை 19,354 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல். கரூர் அடுத்த புன்னம்சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின்நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செழியன்,மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் செவிலியர்கள் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களை கல்லூரியின் தாளாளரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன மலையப்பசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.மேலும் முகாமில் பங்கேற்க வந்த நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள் காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்றுக் கொண்ட பயனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும்போது கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் நவம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் 7,364 ஆண்களும், 11,848 பெண்கள் என மொத்தம் இதுவரை 19,354 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story




