பொள்ளாச்சி அருகே கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி.,
Pollachi King 24x7 |26 Aug 2024 4:31 AM GMT
பொள்ளாச்சி அருகே பரிதாபம் கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி.,
பொள்ளாச்சி அருகே பரிதாபம் கல் குவாரியில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி., பொள்ளாச்சி., ஆகஸ்ட்.,26 பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ,சிங்கையன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் வயது (28) இவர் தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி., இவருக்கு திருமணம் ஆகி தனது மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இந்நிலையில் இவரது வீட்டு அருகே உள்ள கல்குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காக அவரது உறவினர் பிரபு என்பவரது மகன் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் 7 வயது விஷ்ணுவை அழைத்து சென்று கல்குவாரியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதற்காக சென்றனர்., இருவரும் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்காக போராடி சத்தம் போட்டுள்ளனர்., இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்து பார்த்தபோது இருவரும் மயக்க நிலையில் இருந்தனர் பின்னர் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விக்னேஸ்வரன் விஷ்ணு இருவரும் ஏற்கனவே இருந்துவிட்டதாக தெரிவித்தனர்., இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் அரசு பள்ளி மாணவன், கூலி தொழிலாளி தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.,
Next Story