பிளஸ் 2 படித்தபெண் டாக்டர் எனக் கூறி ஏமாற்றி 4வது திருமணம்

சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவர் என பில்டப் கொடுத்து நான்கு பேரை திருமண செய்து நகை பணத்தை திருடி விட்டு தண்ணீ காட்டி வந்த மீனவ பெண் கைது வடிவேலு பட பாணியில் முதல் கணவர் தொடங்கி நான்கு பேரை பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மூலம் வலை வீசி இளம் ஆண்களை ஏமாற்றி வந்த பெண் வலைதள மூலமே சிக்கியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குளங்கரை தெருவை தெருவை சேர்ந்தவர் ஜீவா மகன் சிவசந்திரன் (வயது 27) இவர் தனியார் வங்கியில் குழு கடன் வசூல் செய்யும் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிவசந்திரனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்பொழுது நிஷாந்தி என்பவர் தான் எம்பிபிஎஸ் எம் எஸ் படித்துவிட்டு டாக்டராக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வேலை பார்த்து வருவதாகவும் தன்னை அறிமுகம் செய்து கொண்டு இருவரும் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 20.1.2025 ஆண்டு சீர்காழியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆடம்பரமாக சிவசந்திரனுக்கும் நிஷாந்திக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. இதைக்கண்ட மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் வாய்க்காங்கரை தெருவை சேர்ந்த தங்கராசு மகன் நெப்போலியன் (வயது 34) என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் ஒன்று செய்தார் அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்ததாவது கடந்த 2017 ஆம் ஆண்டு தனது பெயர் மீரா என்றும் தான் அரசு வேலை செய்து வருவதாகவும் கூறியதன் பெயரில் அவரை காதலித்து நான் திருமணம் செய்து கொண்டு கடலூர், சிதம்பரம், சென்னை ஆகிய ஊர்களில் வசித்து வந்தோம் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த போது ஒன்றும் சொல்லாமல் என்னை விட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் தொடர்பு கொள்ள முடியவில்லை இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் மீரா சீர்காழி சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் இதனைத் தொடர்ந்து தன்னை ஏமாற்றிய மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன் புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து லட்சுமி என்கின்ற நிஷாந்தியை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள், கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி பிளஸ் டூ வரை படித்துள்ளார். பழையார் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு முறைப்படி கடந்த சுமார் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது இவர்களுக்கு தர்ஷன் என்கின்ற மகனும், ரேணுகா என்கின்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் பெண்குழந்தையை இறந்து போன கணவரின் அண்ணன் ஜெயக்குமார் பராமரிப்பில் விட்டுவிட்டு ஆண் குழந்தையை இவர்கொடியம்பாளையத்தில் உள்ள தன்அம்மா வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். பின்னர் தனது பெயரை மாற்றிக் கொண்டு 2017 ஆம் ஆண்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நெப்போலியனை திருமணம் செய்துவிட்டு 2021 ஆம் ஆண்டு தலைமறைவாகிவிட்டார் . மீண்டும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரம் கோல்டன் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ராஜா என்பவரை சந்தித்து நிஷாந்திதான் எம்பிபிஎஸ் எம் எஸ் படித்து விட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணிபுரிவதாக கூறி குடும்பம் நடத்தியுள்ளார் பின்னர் தன்னை கோயமுத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றி விட்டதாக கூறி தலைமறிவாகியுள்ளார் . இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலை போலீசார் லட்சுமியை கைது சிறையில் அடைத்தனர்.
Next Story