மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் அரசாணை எண் 20ஐ அமல்படுத்த கோரி
Mayiladuthurai King 24x7 |17 Aug 2024 4:17 PM GMT
சுகாதார ஊக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொழிலாளர் சட்டம் அரசாணை 20-ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்:- மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்
:- மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் சுகாதார ஊக்குனர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மலர் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாராக பங்கேற்று பேசிய சங்கத்தின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான இளங்கோ கூறியதாவது: ஊராட்சி சுகாதார ஊக்குனர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் அறிவித்த மாத ஊதியம் ரூ.2000-த்தை ஜனவரி மாதம் முதல் உடனடியாக வழங்க வேண்டும், சுகாதார ஊக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு தொழிலாளர் சட்டம் அரசாணை 20-ன்படி குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும், பணி ஆண்டுகளை கணக்கிட்டு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் குடும்ப நலம் வழங்க வேண்டும், பணி நாள்களில் பணியாளர்கள் உயிரிழந்தால் அரசின் நடைமுறை சட்டத்தின்படி குடும்ப உறுப்பினர்களுக்கு பணி வழங்கிட வேண்டும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர,; சுகாதார உறுப்பினர்கள் இவர்கள் தூய்மை பாரத இயக்கத்தில்; 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுகாதார உறுப்பினர்களுக்கு மாத ஊதியத்தை அவர்களது வங்கி கணக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
Next Story