மர இழைப்பகத்தில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்

X
. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு அருகில் வெங்கடேசன் என்பவர் மரஇழைப்பகம் வைத்துள்ளார் தேக்கு வேங்கை பூவரசு உள்ளிட்ட விலை உயர்ந்த மர பொருட்களைக் கொண்டு வீடுகளுக்கான கதவு பூஜை அறை ஜன்னல் உள்ளிட்ட பொருட்களை செய்து வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மர இழப்பகத்தில் பணிகள் முடிந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மரப் பொருட்கள் மற்றும் இயந்திரம் தீயில் கருகி நாசமானது அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு துறையினர் கொழுந்துவிட்டு தெரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதற்குள் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எறிந்து நாசமானது இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

