வீட்டின் முன் கதவை உடைத்து 25 பவுன் நகை திருட்டு
Mayiladuthurai King 24x7 |11 Dec 2024 10:29 PM GMT
தரங்கம்பாடி அருகே அரும்பாக்கம் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை. பெரம்பூர் போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரும்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(43) வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறையில் கட்டியுள்ள வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்காக கடந்த 5ஆம் தேதி குடும்பத்தினருடன் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். கார்த்திகேயன் மட்டும் தினந்தோறும் மதியம் வீட்டிற்கு வந்து மீண்டும் மயிலாடுவதற்கு சென்று வந்த நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த கார்த்திகேயன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.அரும்பாக்கம் கிராமத்தில் 25 பவுன் தங்க நகை கொள்ளையடிகீகப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் முறையாக ரோந்து பணியினை மேற்கொண்டு இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story