கரூரில் 25 ஆம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
Karur King 24x7 |28 Dec 2025 4:02 PM ISTகரூரில் 25 ஆம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
கரூரில் 25 ஆம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற ஐயப்ப சேவா சங்கத்தின் 39 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று ஐயப்பன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் 25 ஆம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திருமணம் நடத்துவதற்கு தேவையான சீர் வரிசை பொருட்களை வழங்கினர். திருமணம் நடத்துவதற்காக கும்பகோணம் ஸ்ரீ பலராம் பாகவதர் தலைமையிலான குழுவினர் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்து இறை பாடல்களை பாடி பக்தர்களை பரவசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஸ்ரீ சீதாவிற்கு கெட்டி மேளங்கள் முழங்க மங்கல நாணை அணிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் திருமண தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இன்று மாலை ஸ்ரீ சீதா ராமர் திருவீதி உலா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story







