கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடிய திமுகவினர்.
Karur King 24x7 |3 Jan 2026 2:34 PM ISTகரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடிய திமுகவினர்.
கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்தநாள் பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் கொண்டாடிய திமுகவினர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த குறுநில மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 267 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் நாயக்கர் சமுதாயத்தினரும் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் பொருத்தப்பட்டிருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ படத்திற்கு கரூர் மாவட்ட திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நாயக்க சமுதாயத்தினரின் பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டு இசைத்த இசைக்கு ஏற்ப பாரம்பரிய நடனமான தேவராட்டத்தை பல்வேறு நடன அசைவுகளோடு ஆடி பாடி கொண்டாடினார். தொடர்ந்து பொய்க்கால் குதிரை நடனமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகமசுந்தரி, மாவட்ட அளவிலான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டு வீரத்திற்கு பெயர் போன வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை சிறந்த நாளை கொண்டாடினர்.
Next Story





