கரூரில் ரூ. சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
Karur King 24x7 |17 Nov 2025 7:11 PM ISTகரூரில் ரூ. சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூரில் ரூ. சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கடவூர் மேற்கு ஒன்றிய பகுதியான தரகம்பட்டியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிழல் குடையை இன்று திறந்து வைத்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இதனைத் தொடர்ந்து NRGES திட்டத்தில் ரூபாய் 9- லட்சத்தில் சங்கி பூசாரிப்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலை கடையையும் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியம் பால ராஜபுரம் ஊராட்சி காமராஜ் பண்ணையில் ரூபாய் 5.91 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Next Story






