கரூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 28 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினர்.

கரூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 28 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினர்.
கரூரில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் 28 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கினர். காவலர் துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர். இந்த பேட்ஜில் பணிக்கு சேர்ந்த சக போலீசார் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா 500 ரூபாய் வழங்கி உதவி செய்து வருகின்றனர். 2003ம் ஆண்டு காவலர்கள் நண்பர்கள் உதவும் கரங்கள் மூலமாக இதுவரை 71 பேருக்கு பங்களிப்பை செய்துள்ளனர். அந்த வரிசையில் இன்று கரூரை சார்ந்த அருள்குமார் சத்தியமங்களத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் 5626 காவலர்கள் தலா 500 வீதம் 28 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் சேர்த்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தும், 10 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்து வழங்கினர். இந்நிகழ்வில் உயிரிழந்த காவலரின் குடும்ப உறுப்பினர்கள், 2003 பேட்ஜ் காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story