தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை புதுப்பிக்க ரூ.3. 63 லட்சம்

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருவதை சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி கடற்கரை ஓரத்தில் 36 ஆயிரத்து 410 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம்,முதல்தளத்துடன்கூடய டேனிஷ் கோட்டை உள்ளது. இக்கோட்டை தஞ்சை அரசரான  இரகுநாத நாயக்கருடன்  டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை ஆகும் .இந்தியா விடுதலையான 1947 க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978வரை பயன்படுத்தப்பட்டுவந்தது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும்  அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோட்டை அண்மைக் காலத்தில், இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001 இல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. அடுத்து 2011இல் தமிழக சுற்றுலாத் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இக்கோட்டை தற்போது மீண்டும் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோட்டை புதுப்பிக்கும் பணிகளை இன்று சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் மேலும் தரைத்தளம்,முதல்தளத்தில் இதுவரை நடைபெற்றுள்ள புதுப்பிக்கும் பணிகள் தொடர்பாக பொறியாளர்களிடம் விரிவாக கேட்டறிந்தனர் ஒப்பந்தகால கேடுவிற்குள் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களிடம் சுற்றுலாத்துறை ஆணையர் அறிவுறுத்தினார் இவ்வாய்வின்போது சுற்றுலா துறையினர், தொல்லியல் துறையினர், பொதுப்பணி துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story