கரூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வாரிசு சான்றிதழ் கொடுக்க 3000 லஞ்சம் வாங்கிய போது கைது.

கரூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வாரிசு சான்றிதழ் கொடுக்க 3000 லஞ்சம் வாங்கிய போது கைது.
கரூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வாரிசு சான்றிதழ் கொடுக்க 3000 லஞ்சம் வாங்கிய போது கைது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் வடக்கு கிராமம். கிராம நிர்வாக அலுவலராக பிள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 46) பணிபுரிந்து வந்தார். மேட்டு மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் இறந்து விட்டார். அவரது மகன் சதீஷ்குமார், வாரிசு சான்றிதழ் கேட்டு விஏஓ பிரபுவிடம் மனு அளித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு, 3000 ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை கரூர் டிஎஸ்பி அம்புரோஸ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று 3000 ரூபாய் பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்துள்ளனர். சதீஷ்குமார் ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் விஏஓ ரூபாய் 3000 லஞ்சம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் மாட்டிக் கொண்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story