அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் 3200பேர் நடனமாடி பொங்கள் விழா கொண்டாட்டம்

◌ மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் 3200 மாணவிகள் உற்சாக நடனம்.- பொங்கல் விழா
. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. புதுப் பானையில் பொங்கல் பொங்கி கரும்பு வைத்து படையல் இட்டு பேராசிரியர்கள் மாணவிகள் கல்லூரி பொறுப்பு முதல்வர் ராமச்சந்திர ராஜா தலைமையில் வழிபாடு நடத்தினர். ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவிகள் 3,200 பேர் ஒரே நேரத்தில் நடனமாடியது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. திரைப்படப் பாடல்களுக்கு மாணவிகள் குழுக்களாக சேர்ந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை நடனம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story