திருக்குறள் பண்பாட்டு பேரவை 33ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டுப் பேரவை சார்பாக 33 ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது.
. திருக்குறள் பண்பாட்டுப் பேரவை விழா சீர்காழி எல். எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை மாணவ, மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் குறித்த கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, நடன போட்டி, மற்றும் ஓவியப் போட்டிகள் ஒவ்வொரு பள்ளியிலும் நடைபெற்று அந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருக்குறள் பண்பாட்டு பேரவையின் தலைவர் வே. சக்கரபாணி அவர்கள் தலைமையில் பேரவை செயலாளர் சிவ. அன்பழகன் வரவேற்புரை கூற, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எம்.பன்னீர்செல்வம், ஆர் கல்யாணசுந்தரம், ஜெக. சண்முகம், ந. முருகவேல், அ.இராமநாதன், என். அன்பழகன், ஏ. முருகையன், க. இளங்கோ,ஆகியோர் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி பேராசிரியர் துரை. குணசேகரன். திருக்குறள் குறித்த சிறப்புரை ஆற்றினார். முரு. முத்துக்கருப்பன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார், நிகழ்ச்சியில் ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எஸ் . முரளிதரன், தமிழ் ஆசிரியர்கள் பி. புலவேந்திரன், தருமை. சிவா, மங்கையர்கரசி, பேராசிரியர் சசிகுமார், ராமகிருஷ்ணன், வீரபாண்டியன், தியாகராசன், கலியமூர்த்தி, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டு, காழி. கோ. வைத்தியநாத சாமி நன்றி கூற விழா நிறைவுற்றது.
Next Story