கரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 34 பயனாளிகளுக்கு ரூபாய் சுமார் 55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
Karur King 24x7 |26 Jan 2026 10:09 AM ISTகரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 34 பயனாளிகளுக்கு ரூபாய் சுமார் 55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 34 பயனாளிகளுக்கு ரூபாய் சுமார் 55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசு நாடாக மலர்ந்ததை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 இல் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் இன்று குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா ஆகியோர் தலைமையில் தேசியக்கொடியை பறக்கவிட்டு மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து மூவர்ண கொடியில் உள்ள வண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை துறையினர் நடத்திய அணிவகுப்பை வாகனத்தில் சென்று பார்வையிட்டு ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூபாய் சுமார் 55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். மேலும் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்கள் அணிவித்து நற்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். நமது நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Next Story








