மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை செயற்குழு உறுப்பினர் கோபி ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும். தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும் தமிழக முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மதிமுக தொடர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story